fbpx

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வச்சுட்டு.. இளைஞர் செய்த காரியத்தை பாருங்க…!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரின் நக்லா தல்ஃபி பகுதியில் வசித்து வரும் இளைஞர் கர்மவீர் சிங். இவர் கடந்த சில வருடங்களாக அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். அதேபோல், இந்திய ராணுவத்தில் சேர்வதற்கும் முயற்சி செய்துள்ளார். ஆனால், அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், வேலை கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கர்மவீர் சிங் நேற்று யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். ஆற்றில் குதிப்பதற்கு முன்பாக அரசு வேலை கிடைக்காததால் வேறுவழியின்றி தற்கொலை செய்துகொள்கிறேன் என்று தனது வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ஆற்றில் குதித்துள்ளார்.

இதை பார்த்த, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கர்மவீரை தேடினர். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து, தேடுதலை தொடங்கிய காவல்துறையினர் ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையோரம் கர்மவீரின் செல்போன் மற்றும் செருப்பு இவைகளை கண்டெடுத்தனர். அவர் ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்த காவல்துறையினர் கர்மவீரின் உடலை தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

கனமழை... இந்த மாவட்டங்களில் மட்டும் இன்று விடுமுறை... அரசு அறிவிப்பு...!

Wed Aug 3 , 2022
கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டலச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும் பெய்யும். நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, […]

You May Like