fbpx

கேஆர்பி அணையிலிருந்து நீர்திறப்பு.! ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 2,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இதனால், அணைக்கு வரும் 2,800 கன அடி நீரும் பிரதான மதகு வழியாக ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

கேஆர்பி அணையிலிருந்து நீர்திறப்பு.! ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

இதனிடையே, ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு தொடர் கனமழை காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது. ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 1,370 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையின் முழுக் கொள்ளளவான 44.28 அடிகளில் 42.15 அடிகள் நீர் உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1,308 கன அடிநீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிகரை முனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், அணையின் முழு கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டியது. இதன் காரணமாக அந்த 10 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையிலிருந்து 1.75 லட்சத்துக்கும் மேல் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

கேஆர்பி அணையிலிருந்து நீர்திறப்பு.! ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஈரோடு மாவட்ட காவேரி கரை முனியப்பன் கோயில் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் அதிகரித்து வரும் தண்ணீரால் ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, வருவாய் துறையினர் தாழ்வான பகுதியில் இருந்த 230 பேர் பாதுகாப்பாக மீட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

Chella

Next Post

இந்தியாவில் மீண்டும் 20 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை...!

Thu Aug 4 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 19,893 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 53 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 17,897 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like