பயங்கர எச்சரிக்கை… 55 கி.மீ வேகத்தில் வீசும் காற்று… வரும் 12-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்…! வானிலை மையம்

தமிழகத்தில் வரும் 12ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை  முதல் வரும் 12-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென்தமிழ்நாடு கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் வரும் 11-ம் தேதி வரை: ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதே போல 12-ம் தேதி வரை கர்நாடகா கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: ரேஷன் அட்டையில் திருத்தம்…! இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

Vignesh

Next Post

உஷார் மக்களே... தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலத்திற்கு டெங்கு எச்சரிக்கை...! நடவடிக்கைக்கு மத்திய அரசு உத்தரவு...!

Sat Jul 9 , 2022
கொசு ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாகத் தொடங்க வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய மக்களையும், சமுதாயங்களையும்  ஈடுபடுத்தும் வகையில், அவர்களது பங்கேற்புடன் மக்கள் இயக்கங்களைத் தொடங்குமாறு உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.  கொசு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற […]

You May Like