ஐசிசி டி20 கிரிக்கெட் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 76 ரன்களை பதிவு செய்ததுடன், ஆட்டநாயகனாகவும் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சர்வதேச டி20 பேஸ்ட்மேன்கள் தரவரிசையில் 816 புள்ளிகள் பெற்று 2வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் 818 புள்ளிகளுடன் நீடிக்கிறார். 3-வது இடத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் இடம் பிடித்துள்ளார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய பேஸ்ட்மேன் சூர்யகுமார் யாதவ் தான்.
இந்தப் பட்டியலில் 14-வது இடத்தில் மற்றொரு இந்திய இளம் வீரரான இஷான் கிஷன் உள்ளார்.
16-வது இடத்தில் இந்தியக் கேப்டன் ரோகித் சர்மாவும் இடம்பெற்றுள்ளார். டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் புவனேஸ்வர் குமார் 653 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் நீடிக்கிறார். டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசையில் டாப் 10 பட்டியலில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. 13-வது இடத்தில் இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா உள்ளார்.