fbpx

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் துணைக் கேப்டனாகிறார் ஹர்த்திக் பாண்ட்யா..?

டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யாவை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி மற்றும் விராட் கோலி தலைமையிலான சர்வதேசப் போட்டிகளில் ஆல் ரவுண்டராக ஆதிக்கம் செலுத்தி வந்த ஹர்திக் பாண்ட்யா, காயம் காரணமாக இந்திய அணியில் தனது இடத்தை இழந்து தவித்து வந்தார். பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தியதால், சில போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா பிசிசிஐ-யால் தவிர்க்கப்பட்டார். இருப்பினும், அறுவை சிகிச்சை முடிந்து, 5 மாத தீவிர தொடர் பயிற்சியால் தனது முழு உடல் தகுதியை எட்டிய ஹர்திக் பாண்ட்யா, 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மட்டுமில்லாது அறிமுக அணியான குஜராத் அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்து அனைவரின் பாராட்டுக்களையும், கவனத்தையும் ஈர்த்தார்.

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் துணைக் கேப்டனாகிறார் ஹர்த்திக் பாண்ட்யா..?

அதனைத்தொடர்ந்து இந்திய அணியில் மீண்டும் விளையாட ஆரம்பித்த ஹர்திக் பாண்ட்யா, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாகவும் செயல்பட்டு, தொடரை கைப்பற்றி தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். இந்நிலையில், டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச டி20 உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் துணைக் கேப்டனாகிறார் ஹர்த்திக் பாண்ட்யா..?

போட்டி ஆரம்பிக்க இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், இந்திய அணியின் துணைக் கேப்டனான கே.எல்.ராகுல் காயம் மற்றும் உடற்தகுதியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், அவர் உலகக் கோப்பை டி20 அணியில் இடம் பெறுவது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, தற்போது கிரிக்கெட் தொடர்களில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு, துணைக் கேப்டன் பதவி வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் வீரர்கள் பலரின் ஆதரவும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு உள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Chella

Next Post

வரும் 9-ம் தேதி வரை மழை தொடரும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..

Fri Aug 5 , 2022
தமிழகத்தில் வரும் 9-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, 05.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிக கனமழையும்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

You May Like