கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
கொரோனா பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.. 2வது அலை, 3-வது அலை, 4-வது அலை என அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது… இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அவ்வப்போது குறைவதும் மீண்டும் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. மேலும் சராசரியாக 4 மாதங்களுக்கு ஒருமுறை கொரோனாவின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருகிறது..
பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது.. அந்த வகையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ” “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.. லேசான அறிகுறிகள் இருப்பதால் நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.. கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.. உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.. எனது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது..” என்று குறிப்பிட்டுள்ளார்..