fbpx

நாடாளுமன்றத்தில் இன்று மின்சார திருத்த மசோதா தாக்கல் : மின்வாரிய ஊழியர்கள் எதிர்ப்பது ஏன்?

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.. எனினும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் முடங்கி வருகின்றன.. இந்நிலையில் இன்று மின்சாரத் திருத்த மசோதா அல்லது எரிசக்தி பாதுகாப்பு (திருத்தம்) மசோதா, 2022ஐ மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது..

மின்சார விநியோகத் துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை உறுதி செய்வதையும், தொலைத்தொடர்பு சேவைகளைப் போலவே மின் நுகர்வோர் தனியார் நிறுவனங்களின் பல சேவை வழங்குனர்களையும் தேர்வு செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது…

மின்சாரச் சட்டத்தின் 62-வது பிரிவில் திருத்தம் செய்து புதிய மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளதால் ஒரு வருடத்தில் கட்டணத்தில் தரப்படுத்தப்பட்ட திருத்தம் மற்றும் (மின்சார ஒழுங்குமுறை) ஆணையத்தால் அதிகபட்ச உச்சவரம்பு மற்றும் குறைந்தபட்ச கட்டணத்தை கட்டாயமாக நிர்ணயம் செய்வதற்கான விதிகளை உருவாக்குகிறது. மேலும் இந்த மசோதா கட்டண பாதுகாப்பு பொறிமுறையை வலுப்படுத்தவும், கட்டுப்பாட்டாளர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கவும் உறுதி செய்கிறது.. ஆனால் மின் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்..

மின் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் மசோதாவை ஏன் எதிர்க்கிறார்கள்? மின்சாரம் (திருத்தம்) மசோதா 2022, நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவுக்கு (பிஏசி) பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று அகில இந்திய ஆற்றல் பொறியாளர்கள் கூட்டமைப்பு (AIPEF) பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், நாடு முழுவதும் உள்ள மின் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக பணிகளை நிறுத்தி ஆகஸ்ட் 8-ம் தேதி போராட்டம் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

AIPEF தலைவர் ஷைலேந்திர துபே பேசிய போது “ மின் நுகர்வோருக்கு, தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல சேவை வழங்குநர்களின் விருப்பத்தை மசோதாவில் வழங்குவது தவறானது மற்றும் அரசு நடத்தும் மின் வாரியத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.. எனவே தனியார் உரிமதாரர்கள் லாபம் ஈட்டும் பகுதிகளில் அதாவது தொழில்துறை மற்றும் வணிக நுகர்வோருக்கு மட்டுமே மின்சாரத்தை வழங்க விரும்புகிறார்கள்.. இதனால் லாபம் ஈட்டும் பகுதிகள் அரசுக்கு சொந்தமான மின் வாரியம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களாக மாறும்.” என்று தெரிவித்தார்.

இதனிடையே மின்சாரத் திருத்த மசோதா 2022ஐ நிறைவேற்றுவதற்கு எதிராக மத்திய அரசுக்கு விவசாயிகள் அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பது, ஓராண்டு காலமாக நடந்த விவசாயிகள் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும். மின்சாரம் (திருத்தம்) மசோதா 2022 நிறைவேற்றப்பட்டால், உடனடியாக நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எஸ்கேஎம் அழைப்பு விடுத்துள்ளது.

Maha

Next Post

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பால், நீர்திறப்பும் அதிகரிப்பு..! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

Mon Aug 8 , 2022
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரியாற்றில் அதிக அளவு நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு உயர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், நேற்று மாலை […]

You May Like