fbpx

இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. 11-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..

இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வடதமிழக மாவட்டங்கள்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, விருதுநகர்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை வடதமிழக மாவட்டங்கள்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, விருதுநகர்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

வரும் 10-ம் தேதி வடதமிழக மாவட்டங்கள்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, விருதுநகர்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ பிதமான மழை பெய்யக்கூடும்‌.

வரும் 11ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 12-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுஇகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிககள், லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள், ஆந்திர கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.. எனவே இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை, மீனவர்கள்‌ கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

விளம்பரப் பலகை விபத்து..! உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..!

Mon Aug 8 , 2022
சென்னை ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தின் அருகே விளம்பரப் பலகையின் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிவாரண உதவி வழங்கியுள்ளார். நேற்றைய தினம் (7.8.2022), பெருங்களத்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று, G.S.T. சாலையில் ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாகச் செல்லும்போது, சாலையின் அருகில் இருந்த விளம்பரப் பலகையில் மோதி, […]
தலைவர் பதவிக்கு அக்.7இல் முக.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்..!! அக்.9இல் திமுக பொதுக்குழு கூட்டம்..!!

You May Like