விடுமுறை நாட்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் திருப்பதிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தேவஸ்தான்ம் கோரிக்கை விடுத்துள்ளது..
ஆந்திர மாநிலத்தின் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.. திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வரும் இந்த கோயில் எப்போதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.. கோயில் பராமரிப்பு பணிகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை தேவஸ்தானம் செய்து வருகிறது.
இந்நிலையில், முதியோர் உள்ளிட்டோர் தங்களது பயணத்தை தள்ளி போட வேண்டும் என திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை முதல் வரும் 15-ம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை நாட்கள் வருகின்றன.. அதாவது நாளை 11-ம் தேதி ஸ்ராவன பவுர்ணமி, 12-ம் தேதி ஹயக்ரீவர் ஜெயந்தி, 13, 14-ம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 15-ம் தேதி சுதந்திர தினம் என தொடர்ந்து விடுமுறைகள் வருகின்றன.. இதனால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும். எனவே முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் திருமலைக்கு வருவோர் தங்கள் பயணத்தை தள்ளிப்போட வேண்டும் என்று தேவஸ்தான் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது..
மேலும், வரும் 19-ம் தேதி கோகுலாஷ்டமி, 20 மற்றும் 21 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த 3 நாட்களும் கூட பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கலாம். எனவே, இந்த 3 நாட்களிலும் கூட பக்தர்கள் திருமலை யாத்திரை குறித்து யோசித்து, முன்கூட்டியே முன்பதிவு செய்திருந்தால் தவிர, திருமலைக்கு வருவதை தள்ளி போட வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.