ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் பயங்கரவாதிளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பந்திபோராவின் அஜாஸ் தெஹ்சில் சதுனாரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நேற்று நள்ளிரவு துப்பாக்கி சூடு நடத்தியதில், புலம்பெயர்ந்த தொழிலாளி ஒவருர் சுடப்பட்டார்.. இதில் காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர்.. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது..
காஷ்மீரில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது இது முதன்முறையல்ல.. அங்குள்ள உள்ளூர் அல்லாதவர்களை குறிவைத்து தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஜூன் 2ஆம் தேதி குல்காமில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த ஜூன் மாதம், வஜம்மு காஷ்மீரின் புட்காமில் பயங்கரவாதிகள் சுட்டதில் பீகாரைச் சேர்ந்த 17 வயது தில்குஷ் குமார் என்ற புலம்பெயர்ந்த தொழிலாளி கொல்லப்பட்டார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார். புத்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் உள்ளூர் அல்லாத தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..