fbpx

மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கிச் சூடு; 2 பேர் உயிரிழப்பு… டெல்லி ஜெ.ஜெ காலனியில் பரபரப்பு..!

டெல்லியில் நள்ளிரவில் ஜெ.ஜெ காலனியில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட என்ன காரணம் என்று தெரியவில்லை. எனினும் துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியே வந்த குடியிருப்பு வாசிகள் காவல் துறை மற்றும் அவசர மருத்துவ சேவைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கிசூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிசூடு நடத்திவிட்டு தப்பி ஓடியவர்கள் யார் என்பது குறித்து டெல்லி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை பிடிக்க காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நள்ளிரவில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு டெல்லியில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து உயிரிழந்தவரின் சகோதரர் வீர் சிங் கூறுகையில், முகமூடி அணிந்த இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இங்கிருக்கும் குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். எனது சகோதரர் உட்பட மூன்று பேர் பேசிக் கொண்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கிசூட்டில் எனது சகோதரர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் என தெரிவித்தார்.

Rupa

Next Post

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம்; அடுத்த தேர்தல் வரையில் அது வாக்குறுதியாகவே இருக்குமா?: மக்கள் நீதி மய்யம் கேள்வி..!

Tue Aug 23 , 2022
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான ரூ. 10,696 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறையை தன்வசம் வைத்திருக்கும் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில், எந்தவிதமான அரசு உதவி தொகையும் பெறாத 21 முதல் 57 வயது வரையிலான வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் […]

You May Like