fbpx

தனியார் பள்ளி நிர்வாகத்தின் அராஜகம்.. கட்டணம் செலுத்தாத மாணவர்களை; வகுப்பறையில் அடைத்து வைத்த கொடூரம்..!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரின் காதிகியா பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் 34 மாணவர்கள் பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்று சொல்லி அவர்களை நேற்று முன்தினம் ஒரு வகுப்பறையில் ஆசிரியர்கள் அடைத்துள்ளனர். ஐந்து மணி நேரம் அந்த மாணவர்களை சாப்பிட, தண்ணீர் குடிக்க, கழிப்பறை செல்ல கூட அனுமதிக்கவில்லை என்று கூறுகின்றனர்.

பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் அடைத்து வைத்திருப்பதாக அந்த மாணவர்களிடம் கூறிய பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கவும் அனுமதிக்கவில்லை சுமார் ஐந்து மணி நேரம் கழிந்த நிலையில், கட்டணம் செலுத்தாதது குறித்த நோட்டீசை மாணவர்களுக்கு கொடுத்து, அதை அவர்கள் அவர்களுடைய பெற்றோரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளனர்.

இதனால் பள்ளி நிர்வாகத்தின் மீது கோபமடைந்த பெற்றோர்கள் நேற்று பெருமளவில் திரண்டு, பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பெற்றோரில் ஒருவர், தான் ஏற்கனவே ஆன்லைன் வாயிலாக பள்ளிக் கட்டணத்தைச் செலுத்திவிட்டதாகவும், ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது தெரியவில்லை என்றும் கூறினார்.

Baskar

Next Post

திட்டங்களை அறிவித்துவிட்டு பின்வாங்குவது ஏன்..? அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு பதில்..!

Wed Aug 24 , 2022
”மாணவர்களின் நலனுக்காக சில திட்டங்களில் பின் வாங்குவது என்பது தவறில்லை” என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராம்கோ கல்லூரியில் தலைமை ஆசிரியர்கள் தலைமை பண்பு மேம்பாட்டிற்கான கருத்தாளர் பயிற்சி நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஆசிரியர்களிடம் சிறப்புரையாற்றினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் தலைமை ஆசிரியர்களுக்கு இதுபோன்று பயிற்சி அளிக்கப்படுகிறது. […]

You May Like