fbpx

அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வை கடத்திய அம்மா பேரவை செயலாளர்..? ஒன்றரை கோடி ரூபாய் பறித்துச் சென்ற கும்பல்..!

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரனை கடத்திச் சென்ற மர்ம நபர்கள், ஒன்றரை கோடி ரூபாயை பெற்று அவரை விட்டுச் சென்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2016-2021 வரை இருந்தவர் அதிமுகவை சேர்ந்த எஸ்.ஈஸ்வரன். இந்நிலையில், 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் ஈஸ்வரனை கடத்திச் சென்று, விடிய விடிய வைத்து தடியால் அடித்துள்ளனர். மேலும் 3 கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே விடுவிக்க முடியும் என நிர்பந்தம் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஈஸ்வரன், வீட்டில் உள்ள ஒன்றரை கோடி ரூபாயை எடுத்து தருவதாகவும் தன்னை விடுவிக்குமாறும் கேட்டுள்ளார். இதையடுத்து, நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் ஈஸ்வரனை வீட்டுக்கு அழைத்து வந்த மர்ம கும்பல் வீட்டிலிருந்த ஒன்றரை கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு அவரை விட்டு சென்று விட்டனர். அதன் பிறகு பவானிசாகர் காவல் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார். புகாரில், தான் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தன்னை வழிமறித்து கண்களை கருப்பு துணியால் கட்டி தன்னை கடத்தி சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வை கடத்திய அம்மா பேரவை செயலாளர்..? ஒன்றரை கோடி ரூபாய் பறித்துச் சென்ற கும்பல்..!

மேலும், தன்னிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு தன்னை விட்டு சென்றதாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவரில் ஒருவர் மட்டுமே தனக்கு அடையாளம் தெரிந்ததாகவும், அவர் அறியப்பம்பாளையம் பகுதி அம்மா பேரவை செயலாளராக இருந்த சரவணன் என்றும் ஈஸ்வரன் புகாரில் தெரிவித்துள்ளார். சரவணன் மீது பல்வேறு மோசடி வழக்குகள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த வருடம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மர்ம நபர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Chella

Next Post

“ ராகுல்காந்தியின் முதிர்ச்சியின்மை தான் எல்லாத்துக்கும் காரணம்..” குலாம் நபி ஆசாத் சராமரி குற்றச்சாட்டு..

Fri Aug 26 , 2022
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத், அடிப்படை உறுப்பினர் உட்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.. தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரான சோனியா காந்திக்கும் அவர் அனுப்பி உள்ளார்.. அந்த கடிதத்தில் ராகுல்காந்தி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை […]

You May Like