மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டத்தில் இருக்கும் கச்சார் கிராமத்தில் உள்ள அடிபம்பு ஒன்றில் இருந்து ஒரே நேரத்தில் தண்ணீரும், நெருப்பும் கொப்பளித்து வெளிவந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கச்சார் கிராமத்தில் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக இரண்டு அடிபம்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதில் ஒரு அடிபம்பில் இருந்து நீரும், நெருப்பும் ஒரே சமயத்தில் வெளியேறுவதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது பற்றி ஆய்வாளர்கள் கூறுகையில், அடிபம்பில் இருந்து நீருடன், நெருப்பு வெளியேறுவது அதிசய நிகழ்வு கிடையாது என்றும், இது பொதுவாக ஹைட்ரோகார்பன் எனப்படும் மீத்தேன் வாயு வெளியேறுவதால் உண்டாகும் நிகழ்வு என்று கூறுகின்றனர்.