பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக கனல் கண்ணன் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடத்தல், ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதை தொடர்ந்து புதுச்சேரியில் இருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் கனல் கண்ணனின் முன் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் அவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். கனல் கண்ணனின் ஜாமின் மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நாளை மறுநாள் விசாரணைக்கு வர இருக்கிறது.