fbpx

’கரந்த பால் மடியேறாது… கருவாடு மீனாகாது’.! நடிப்பில் ரஜினி, சிவாஜியை தோற்கடிக்கும் ஓபிஎஸ்.!

”ஓபிஎஸ் நடிகராக இருந்திருந்தால் ரஜினி, சிவாஜியை தோற்கடித்து ஆஸ்கர் விருதை பெற்றிருப்பார்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பணம் கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். தொண்டர்களை நம்பி அதிமுக தொடங்கப்பட்டதே தவிர, தலைவர்களை நம்பியோ, எம்பிக்கள், எம்.எல்.ஏக்களை நம்பியோ தொடங்கப்படவில்லை. அதிமுகவை தொண்டர்களை நம்பித்தான் தலைவர் எம்ஜிஆர் தொடங்கினார். பன்னீர்செல்வம் உத்தமன் போல பேசும் மகா நடிகர். அவர் நடிகராக இருந்திருந்தால் ரஜினி, சிவாஜியை தோற்கடித்து ஆஸ்கர் விருதை பெற்று இருப்பார். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறக் கூடாது என்ற எண்ணத்தில் பன்னீர்செல்வம் செயல்பட்டார்.

’கரந்த பால் மடியேறாது... கருவாடு மீனாகாது’.! நடிப்பில் ரஜினி, சிவாஜியை தோற்கடிக்கும் ஓபிஎஸ்.!

மேலும், அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வத்துக்கு, அதிமுகவில் என்றுமே இடம் கிடையாது. கரந்த பால் மடியேறாது.. கருவாடு மீனாகாது.. பன்னீர்செல்வத்தின் தற்போதைய செயல்பாடுகள் எதுவும் அதிமுகவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பன்னீர் மேற்கொள்வது மிரட்சி பயணம். ஜெயலலிதா மரண அறிக்கையை வெளியிட வேண்டிய கடமை திமுக அரசுக்கு உண்டு. ஜெயலலிதா மரணம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும் சசிகலா, விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியமளிக்காத்து ஏன்? என்ற கேள்வியையும் எழுப்பினார்.

Chella

Next Post

அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகன் தூக்கிட்டு தற்கொலை..! வெளியான திடுக்கிடும் தகவல்..!

Sun Aug 28 , 2022
அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மருமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சரவையில் கடந்த 2016 ஆண்டு அமைச்சராக இருந்தவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், பாஸ்கரன் தனது மகள் சுமதியை சிவகங்கையைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். பொறியியல் பட்டதாரியான சரவணன், கட்டுமான ஒப்பந்ததாரர் வேலை பார்த்து வந்ததோடு […]
’நான் ஹாஸ்டல் போக மாட்டேன்’..!! ஆத்திரத்தில் தாயின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொன்ற சிறுவன்..!!

You May Like