நீட் முதன்நிலை மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 21-ம் தேதி நடைபெற்றது. நடப்பு ஆண்டு நீட் முதுகலை தேர்வை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 318 தேர்வர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளுடன், முதுகலை நீட் 2022-ம் ஆண்டிற்கான கட்-ஆஃப்களும் வெளியிடப்பட்டன. அதன்படி, பொதுப்பிரிவினர், EWS பிரிவினருக்கு கட் – ஆப் 275 ஆகவும், OBC & பட்டியலினத்தவருக்கு கட் – ஆப் 245 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு கட் – ஆப் 260 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
செப்டம்பர் 1ம் தேதி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது தற்பொழுது கவுன்சிலிங் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நீட் முதுநிலை கலந்தாய்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது தேசிய மருத்துவ ஆணையம். இந்த முதுநிலை மருத்துவ படிப்புகளில் கூடுதல் இடங்களை சேர்க்க வேண்டியதன் காரணமாக கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.