fbpx

”இந்த சமூகத்தில் இனியும் நம்மால் வாழ முடியாது”..! இலங்கை அதிபரின் திடீர் முடிவால் பரபரப்பு..!

”பொருளாதாரம் பலமில்லாத சமூகத்தில் இனியும் நம்மால் வாழ முடியாது” என அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு உள்ளான மக்கள் மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர். இதனால், ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார். இதையடுத்து, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே ஜூலை மாதம் 21ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசு அமைந்தாலும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

”இந்த சமூகத்தில் இனியும் நம்மால் வாழ முடியாது”..! இலங்கை அதிபரின் திடீர் முடிவால் பரபரப்பு..!

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசுகையில், ”இலங்கைக்கு நிலையான பொருளாதாரம் அவசியம். இனி கடன் உதவியை நம்பியிருக்கும் தேசமாக இருக்க முடியாது. பொருளாதாரம் பலமில்லாத சமூகத்தில் இனியும் நம்மால் வாழ முடியாது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் துறைகளில் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக குறைக்கப்படும். வரி சேகரிப்பை ஒழுங்குபடுத்தி அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும் அவர்களை கடன் சுமையிலிருந்து மீட்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செல்பட வேண்டும்” என அதிபர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.

Chella

Next Post

தேர்தலில் முன் விரோதம்; தனியாக சிக்கியவரை... அரிவாளால் வெட்டி பழி தீர்த்த அதிர்ச்சி சம்பவம்..!

Wed Aug 31 , 2022
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகில் இருக்கும் ராசாம்பாளையம் கிராமம், வடக்கு தெருவில் வசித்து வருபவர் தாணு (34). இவர் வழக்கறிஞராக உள்ளார். இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில், இந்த ஊராட்சியின் 11வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். தாணுவை எதிர்த்து போட்டியிட்ட அதே ஊரை சேர்ந்த இளங்கோவன் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். இளங்கோவனுக்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (22) என்பவர் தேர்தல் வேலைகளை […]
கள்ளக்காதலுக்கு இடையூறு..!! கணவர் கொலை..!! உடலை புதைத்த இடத்தில் செப்டிக் டேங்க்..!! பகீர் சம்பவம்..!!

You May Like