அமெரிக்க ஓபன் பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்ததை அடுத்து செரினா – வீனஸ் ஜோடி முதல் சுற்றிலேயே படுதோல்வியை சந்தித்தது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு ஆட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தொடங்கிய ஆட்டம் விருவிருப்பாக தொடங்கியது. எதிரணியில் லூசி ஹிராடக்கா(37) மற்றும் லிண்டா நோஸ்கோவா (17) ஆடினர். இளம் வயதான லிண்டா ஆட்டத்தின் முதலில் இருந்தே டப் கொடுத்தார். பிரபல ஜோடியான செரினா – வீனஸ் , ஆட்டத்தின் பாதியில் தடுமாறினர். இந்த ஆட்டத்தின் முடிவில் 7-6 (5) , 6-5 என்ற புள்ளிகளில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தனர். எனவே இது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
ஆட்டம் முடிந்தவுடன் வேகமாக தங்களின் பையை தூக்கிக் கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி இருவரும் நடந்தனர். இது அவர்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.
இந்த ஆட்டத்தை பற்றி செரீனா கூறுகையில் , ’’ நான் என்னிடம் வரும் தடைகள் அனைத்தையும் பெரும்பாலும் தடுக்கின்றேன் என நினைக்கின்றேன். அந்த சூழலில் நானும் கொண்டாட வேண்டும் என்றே நினைத்தேன். எனக்கும் அது ஒரு நெருடலான சூழ்நிலையானது. இந்தத் தருணங்கள் தெளிவாக கடந்து போவதாகவே நான் நினைக்கின்றேன். நான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும். அதை நான் உணர்கின்றேன், இதுவும் ஒரு போனசாக உணர்ந்து முயற்சி செய்கின்றேன் ’’ என்றார்.
இந்தத் தொடருடன் செரீனா ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகது.
அதே நேரத்தில் எதிரணியில் ஆடி முதல்சுற்றின் வெற்றியை கைப்பற்றிய ஹிராடாக்கா லிண்டா ஜோடி வில்லியம்ஸ் இணையை வீழ்த்தியது ஆச்சர்யமாக இருப்பதாக கூறியுள்ளனர்.