திண்டுக்கல் , மதுரை , கன்னியாகுமரி மாவட்டங்களில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்ததால் பொதுமக்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.
ஓணம் பண்டிகைக்காக பொதுமக்கள் அதிக அளவில் பூக்கள் வாங்கி வீடுகளில் வழிபாடுகள் நடத்தவும் , அத்தப்பூ கோலமிடவும் அலங்காரத்திற்கும் பயன்படுத்துவார்கள். எனவே பண்டிகைக் காலங்களில் சாதாரணமாகவே பூக்களின் விலை சற்று அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் இம்முறை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஓணம் பண்டிகையைக் கொண்டாட கேரளா மட்டுமின்றி தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள தமிழ் பேசும் மக்களும் தயாராகி வருகின்றனர். பண்டிகை என்றாலே பூக்களும் அலங்காரமும் தான் . ஆனால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் பூக்களை வாங்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி அடுத்தடுத்து பண்டிகை வரவுள்ளதாலும் , தமிழகத்தில் பல்வேறுமாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாகவும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் அனைத்து வகையான பூக்களின் விலையில் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. வரும் 8ம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திண்டுக்கல் மலர் சந்தையில் இருந்து மட்டும் 50 டன் மலர்கள் கேரளாவுக்கு அனுப்பட்டு வருகின்றது. தோவாளை மற்றும் மதுரை மலர் சந்தைகளில் இருந்து.
கிலோ மல்லிகை ரூ.2000 முதல் ரூ.2,500 வரை விற்கப்படுகின்றது . செண்டுமல்லி , செவ்வந்தி அதிகளவில் வரத்து உள்ளது. மல்லிகை உள்ளிட்ட மலர்களின் வரத்து குறைவாக உள்ளது. பிச்சிப்பூ கிலோ 700 ரூ.க்கும் , கனகாமரம் 800 ரூக்கும் , சம்மங்கி கிலோ 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. பூக்களின் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.