ஆசிய கோப்பை சூப்பர் 4 டி 20 போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி 212 / 2 குவித்து மாஸ் வெற்றியை தட்டிச் சென்றது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் மோதிய கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்றது . எனவே பந்துவீச்சை தேர்வு செய்து விளையாட்டு ஆரம்பமானது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 212 ரன்களை குவித்தது. விராட் கோலி 61 பந்துகளை எதிர்கொண்டு 212 ரன்கள் எடுத்தார் இதில் 12 ஃபேர்கள் , 6 சிக்சர்கள் அடங்கும். கே.எல்.ராகுல் 41 பந்துகள் எதிர்கொண்டு 62 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்சர்கள், 6 ஃபோர்கள் அடங்கும். கடைசியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் ஒரு சிக்சர் அடித்து 2 பாலில் 6 ரன்கள் எடுத்தனர். ரிஷப் 16 பந்துகளில் 4 ஃபோர்கள் விளாசி 20 ரன் எடுத்துள்ளார். நால்வரும் இணைந்து 212 ரன்கள் எடுத்து மாஸ் வெற்றியை நிலைநாட்டினர்.
சதம் அடித்த விராட் : கடந்த இந்தியா – பாக் விளையாட்டில் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் சிக்சர்கள் , ஃபோர்கள் என விளாசியதில் அரங்கமே ஆடிப்போனது. அவர் 122 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் வீரர்கள் எடுத்த ஸ்கோர் விவரம் : இந்தியா பேட்டிங்கில் ஆடிப்போன ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தொடங்கியது. ஹசரத்துல்லா முதலில் பேட்டிங் செய்தார் 4 பந்துகள் வீசப்பட்ட நிலையில் ஒரு ரன் கூட அவர் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரஹ்மானுல்லா குர்பாஸ் ஒரே பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். கரீம் ஜானத் 4 பந்துகளில் 2 ரன்னும் நஜிபுல்லா ஜத்ரன் 0 ரன்னும் , மொகமது நபி 7 பந்துகளில் 7 ரன்னும் எடுத்து வெளியேறினார்கள். அஜ்மத்துல்லா ஓமர்சாய் 6 பந்துகளுக்கு 1 ரன் எடுத்தார். ரஷித்கான் 15 ரன்களும் , முஜீப் உர் ரஹ்மான் 18 ரன்களும் , பரீத் அகமது 5 பந்துகுளில் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார்கள் .
நம்பிக்கை நட்சத்திரங்கள் : அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறிய நிலையில் ஆப்கானிஸ்தானின் , இப்ராஹிம் சர்தான் மற்றும் ஃபரீத் அகமது நம்பிக்கையாக ஆடிக் கொண்டிருந்தனர். 57 பந்துகளை எதிர்கொண்டு இப்ராஹிம் 64 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து ஆப்கானிஸ்தான் 111/8 ரன்கள் எடுத்தனர்.

புவனேஷ்வர் அபார பந்துவீச்சு : அடுத்தடுத்து விக்கெட்டுகள் எடுத்து புவனேஸ்வர் அபாரமாக ஆடினார். மொத்தம் 5 விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார் . அர்ஷ்தீப் சிங் , ரவிச்சந்திரன் , ஹுடா , தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சும் , அபார பேட்டிங்கும் ஆப்கானிஸ்தானை தெறிக்க விட்டது.