fbpx

இந்த மாவட்டத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

ராமநாதபுரத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை மறுநாள் (11.09.2022) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.. மேலும் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளது.. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இன்று முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்..

மேலும் வரும் 15-ம் தேதி வரையும், அக்டோபர் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையும் வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோகளில் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்த வரவும் தடை விதிக்கப்படுகிறது..

நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் 1 கி.மீ தூரத்திற்கு மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று ஜோதி எடுத்து வர வேண்டும்.. அஞ்சலி செலுத்த வாகனங்களில் வருகிறவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று தான் வர வேண்டும்..

Maha

Next Post

மோசமான நிலையில் இருக்கும் பழம்பெரும் நடிகை.. அதிர்ச்சி தகவல்...

Fri Sep 9 , 2022
பழம்பெரும் நடிகை லீலாவதி தற்போது மோசமான உடல்நிலையில் படுக்கையில் அவதிப்பட்டு வருகிறார்.. பழம்பெரும் நடிகை லீலாவதி கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். 85 வயதான அவர், வயது தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் படுத்தப்படுக்கையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. லீலாவதி பெங்களூருக்கு வெளியே ஒரு பண்ணை வீட்டில் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார். நெலமங்களா அருகே உள்ள அவரது […]

You May Like