fbpx

ராணி எலிசபெத்தின் இறப்பு தேதியை 10 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பிரபலம்..

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்த நிலையில், அவரது வாழ்க்கையை ஒட்டி பல்வேறு சுவாரஸ்யங்களும் இன்று நினைவுகூரப்படுகின்றன. அந்த வகையில் அவரின் இறப்பு தேதி குறித்து 10 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பிரபலத்தின் தீர்க்க தரிசனம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.. ஆங்கில ராக் இசைக்குழுவான தி கியூரின் (The Cure) தலைவரான ராபர்ட் ஸ்மித் 10 ஆண்டுகளுக்கு முன்பு ராணியின் இறப்பு தேதியை கணித்தது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

2012 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த விழாவில் ஸ்மித் பேட்டியளித்தார். அப்போது அரச குடும்பத்தை பற்றி பேசிய அவர் “ செப்டம்பர் 7 அன்று ராணி இறந்துவிடுவார், மேலும் ஒரு பெரிய எழுச்சி ஏற்படும், நான் மன்னராக்ககப்படுவேன்” என்று கூறினார்.

ஸ்மித்தின் இந்த கருத்து, பத்து வருடங்கள் மற்றும் ஒரு நாளுக்கு பிறகு உண்மையாகி உள்ளது.. ராணி எலிசபெத் செப்டம்பர் 8-ம் தேதி உயிரிழந்தார்.. ஆனால் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதனை ஸ்மித்தின் தீர்க்கதரிசனம் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.. டிக்டாக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ இப்போது 1.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள், 243,000 விருப்பங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கருத்துகளைப் பெற்றுள்ளது.

Maha

Next Post

அமெரிக்க ஓபன் டென்னிஸ்..! 19 வயதில் வரலாற்று சாதனை படைத்தார் கார்லஸ்..!

Mon Sep 12 , 2022
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தொடரின் 3-ஆம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ் கார்பியா, 5ஆம் நிலை வீரரான நார்வேயின் கேஸ்பர் ரூட் உடன் பலப்பரீட்சை நடத்தினார். கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் இருவரும் களமிறங்கினர். விறுவிறுப்பு நிறைந்த […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ்..! 19 வயதில் வரலாற்று சாதனை படைத்தார் கார்லஸ்..!

You May Like