fbpx

’என் அப்பா என்றைக்கும் தோற்கவில்லை’..! ’நீயா நானா’ நிகழ்ச்சியில் மனதை வருடிய மழலையின் குரல்..!

’நீயா நானா’ நிகழ்ச்சியில் தனது அப்பா குறித்து சிறுமி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

பிரபல விஜய் டிவியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று ’நீயா நானா’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தவாரம் நடைபெறும் நிகழ்ச்சிக்கான பிரமோவை அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

நீயா நானா நிகழ்ச்சி..! சிறுமியின் பேச்சு வைரல்

’கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவி’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்தவார நிகழ்ச்சியில், சிறுமி ஒருவர் தன் தந்தையை புகழ்ந்து பேசியது தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருவதற்கான காரணம். சிறுமியின் குடும்பத்தில் தாய் படிப்பறிவு உள்ளவராகவும், தந்தை படிப்பறிவு குறைந்தவராகவும் இருக்கிறார். தான் படிக்கவில்லை என்பதால் தன் மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக அந்த தந்தை நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

’என் அப்பா என்றைக்கும் தோற்கவில்லை’..! ’நீயா நானா’ நிகழ்ச்சியில் மனதை வருடிய மழலையின் குரல்..!

மேலும், தன் மகளுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு உள்ளதாகவும், அதற்கான முழு முயற்சியை தான் செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே சிறந்த தந்தைக்கான பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அவரது மகள் அந்த பரிசை தந்தைக்கு கொடுத்தார். அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், அந்த சிறுமியிடம் உங்கள் தந்தை தோற்றுவிட்டதாக அனைவரும் கூறுகிறார்கள் என சொன்னார்.

அதற்கு அந்த சிறுமி ”இல்லை.. அவரு நிஜமாவே தோக்கல.. அவரு எனக்காக தான் எல்லாம் கஷ்டப்படுறாரு”.. என மழலை குரலில் உருக்கமாக கூறிய வார்த்தைகளை இணைய வாசிகளை உருக்கமடையச் செய்துள்ளது. தாய் பாசம் எல்லோரிடமும் வெளிப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. ஆனால், தந்தையின் பாசம் அவ்வளவு எளிதாக வெளியே தெரிவதில்லை. ஆனால், அந்த பாசம் வெளியில் தெரியும்போது, அதை கண்ணீருடன் கடக்காமல் யாரும் கடந்தது இல்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

Chella

Next Post

ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, ஆளுநர், தோனி புகைப்படம்..! சர்ச்சையை கிளப்பிய பல்கலைக்கழகம்..!

Mon Sep 12 , 2022
ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, பீகார் மாநில ஆளுநர் பாகு சவுகான் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலம் தர்பாங்கா மாவட்டத்தில் லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகத்தில் 3 மாவட்ட கல்லூரிகள் உள்ளது. அதில், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான ஹால் டிக்கெட் ஆன்லைன் மூலம் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், பி.ஏ. 3-ம் ஆண்டு படிக்கும் சில […]
ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, ஆளுநர், தோனி புகைப்படம்..! சர்ச்சையை கிளப்பிய பல்கலைக்கழகம்..!

You May Like