பொன்னியின் செல்வன் படத்தின் 3-வது பாடலான ராட்சஸ மாமனே பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை வெளியாகிறது..
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது.. சமீபத்தில், பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே வெளியான பொன்னி நதி, சோழா சோழா பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. இதே போல் பொன்னியின் செல்வன் டீசர், ட்ரையிலர் ஆகியவையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது..
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 3-வது பாடலான ராட்சஸ மாமனே பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.. மேலும் Glimpse வீடியோவையும் வெளியிட்டுள்ளது..
சோழர்களின் வரலாற்றை பேசும், பீரீயாடிக்கல் – ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாகவும், விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி, மந்தாகினி என 2 வேடங்களிலும், த்ரிஷா குந்தவையாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையாகவும் நடிக்க உள்ளனர்.. இப்படத்திற்காக ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..