fbpx

’’ எலிபேஸ்ட் ’’ கலந்து கொடுத்துதான் கொன்றேன்…. சிறையில் உள்ள சகாயராணி பகீர் வாக்குமூலம் ….

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் மாணவர் உயிரிழந்த வழக்கில் விசாரணையின்போது ’’ எலிபேஸ்ட் ’’ கலந்து கொடுத்துதான் கொலை செய்தேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

காரைக்கால் கோட்டுச் சேரியில் பாலமணிகண்டன் என்ற சிறுவன் 8ம் வகுப்பு படித்து வந்தான். குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் மாணவர் உயிரிழந்தான். இந்நிலையில் இந்த வழக்கில்  அதே வகுப்பில் படிக்கும் மாணவியின் தாய் சகாய ராணி குளிர்பானம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.  கடந்த செப்டம்பர் 4ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் அன்றிலிருந்து என்ன கொடுத்தீர்கள் என்ற போலீசின் கேள்விக்கு நான் எதையும் கலக்கவில்லை என்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் பேதி மாத்திரைதான் கலந்து கொடுத்தேன் என கூறினார். இதனால் விசாரணையில் குழப்பம் ஏற்பட்டது.

மாணவரின் உடற்கூறு ஆய்வில் குளிர்பானத்தில் கலந்து கொடுத்ததால்தான் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. விஷத்தன்மையுள்ள பொருள் கலக்கப்பட்டுள்ளதுஎன  அறிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில் சகாயராணியின் வாக்கு மூலம் குழப்பம் அடையச் செய்தது.

இன்று மீண்டும் விசாரணை நடத்தியபோது ’’ ஆமாம் , நான் எலிபேஸ்ட் கலந்து கொடுத்தேன் ’’ ’’ மாணவருக்கு குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்தேன். … என உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். தன் மகளை விட நன்றாக படித்ததால் ஆத்திரத்தில் விஷம் கலந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எலி பேஸ்ட்டை தடை செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அரசுக்கு கோரிக்கை அளித்திருந்தது. புதுச்சேரி, காரைக்காலில் தற்கொலைகளுக்கு ’’எலி பேஸ்ட் ’’ அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் அகில அந்திய அளவில்தற்கொலையில்  31.8 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் புதுச்சேரி உள்ளது. இதில் பெரும்பாலானோர் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். எலி பேஸ்ட் குடலில் ஒட்டிக்கொண்டு பின்னர் ரத்தத்தில் கலந்து விடுகின்றது.  என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால், ரூ.2 லட்சம் காப்பீடு பெறலாம்.. அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

Wed Sep 14 , 2022
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும்.. இது ஏழைக் குடும்பங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டம் குறைந்தபட்ச தொகையை பிரீமியமாக செலுத்துவதன் மூலம் லட்சக்கணக்கான தொகையை உறுதி செய்கிறது. இந்தியாவில் சாலை விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையின்படி 2020 முதல் 2021 வரை நாட்டில் விபத்துகள் […]

You May Like