வாட்ஸ் அப் பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே தற்போது வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். இதற்கிடையே, பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது வாட்ஸ் அப் நிறுவனமும் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அந்த வகையில், தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

அதன்படி, வாட்ஸ்அப் iOS பயனர்களுக்கு (ஐபோன்) புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அந்த வகையில், வாட்ஸ் அப் சேட்டின் பழைய மெசேஜ்களை திரும்ப படிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, காலண்டர் ஐகான் எனும் அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதியை க்ளிக் செய்தால் அந்த தேதியில் பேசிய அனைத்து மெசேஜ்களும் வந்து விடுமாம்.