fbpx

அரசுப் பள்ளியில் ஆபாச பாடம்..! ஆசிரியர் மீது மாணவிகள் பரபரப்பு புகார்..! அதிரடி நடவடிக்கை

அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆபாச பாடம் நடத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அந்த பள்ளியில் அக்கவுண்டன்சி பிரிவில் 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு ஆபாச வகுப்பு நடத்தி வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவம் குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், இது றித்து சில மாணவிகள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அரசுப் பள்ளியில் ஆபாச பாடம்..! ஆசிரியர் மீது மாணவிகள் பரபரப்பு புகார்..! அதிரடி நடவடிக்கை

இதனால், கடந்த 6ஆம் தேதி பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளித் தலைமை ஆசிரியரின் அறையை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில், அங்கு வந்த தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி எம்பெருமாள் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். ஆனால், ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து, நேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரளித்தனர். இதையடுத்து, ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார், அவரை கைது செய்தனர்.

Chella

Next Post

மின்கட்டண உயர்வு..! விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு..!

Thu Sep 15 , 2022
மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்தது. இதை தொடர்ந்து மின்கட்டணம் உயர்வு குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இந்த கருத்துக் கேட்பு கூட்டங்களில் மின் நுகர்வோர் கட்டணத்தை உயர்த்துவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மின் கட்டணத்தை கடந்த 10ஆம் தேதி முதல் தமிழக அரசு அமலுக்கு […]
மின்கட்டண உயர்வு..! விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு..!

You May Like