fbpx

குட்நியூஸ்!… சிலிண்டர் விலை குறைந்தது!… எவ்வளவு தெரியுமா?

Cylinder: வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.70.50 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வர்த்தக கேஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படும்.

அந்தவகையில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.70.50 ஆக குறைந்து ரூ.1,840க்கு விற்பனையாகிறது. சென்னையில் நேற்றுவரை ரூ.1,911 என்று விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக சிலிண்டர்கள் இன்றுமுதல் ரூ.1,840க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அதேவேளை வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலையில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதாவது வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி ரூ.818.50க்கு விற்பனை ஆகிறது.

Readmore: கோழி கறியை தோலுடன் சாப்பிட்டால் ஆபத்தா? எச்சரிக்கும் ஆய்வுகள்

Kokila

Next Post

ரூ.1,000 கோடிக்கான ஒப்பந்தத்தை கேரளாவுக்கு வழங்கிய திமுக அரசு...! புட்டு வைத்த அண்ணாமலை

Sat Jun 1 , 2024
பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்துக்கான ரூ.1,000 கோடிக்கான ஒப்பந்தத்தை, தமிழக அரசு நிறுவனமான எல்காட் நிறுவனத்துக்கு வழங்காமல், கேரள மாநில அரசு நிறுவனமான கெல்ட்ரான் நிறுவனத்துக்கு வழங்கிய திமுக அரசு. தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ‘திராவிட மாடல் அரசின் மூன்றே ஆண்டுகளில், தமிழகத்தின் கல்வித் துறை நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சியை கண்டுள்ளது என்றும், நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் தொடக்கம் தான் இது’ என்றும் […]

You May Like