பெங்களூருவில் திருமணம் செய்து கொள்வதாக இருந்த பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைத்தலங்களில் வெளியிட்டதையடுத்து ஆத்திரமடைந்த பெண் மருத்துவரைக் கொலை செய்த சம்பவம் பரபரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையைச் சேர்ந்த மருத்துவர் விகாஸ் பெங்களூருவில் வசித்து வருகின்றார். 27 வயதான இவருக்கும் மைகோ லே அவுட்டைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் பிரதீபாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. பிரதீபா ஆர்க்கிடெக்டாக தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகின்றது. சமூக வலைத்தலத்தில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த விகாஸ் என்பவருடன் பேசி , பழகி இருவரும் அறிமுகம் ஆனார்கள்.
இதையடுத்து இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துபோனதால் நேரில் சந்தித்து காதலை பரிமாறிக் கொண்டனர். பின்னர் வீட்டில் தெரிவித்து சம்மதம் வாங்கினர். பின்னர் நிச்சயம் செய்து கொண்ட நிலையில் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருந்தனர்.
விகாஸ், உக்ரைனில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு சென்னையில் பயிற்சி மருத்துவராக பயிற்சி எடுத்துள்ளார். இதனிடையே பெங்களூருவில் அடுத்தக்கட்ட பயிற்சிக்காக 6 மாத காலத்திற்கு தங்கி படிக்க வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் ’’லிவிங் டுகெதரில்’’ இருந்து வந்துள்ளனர். பிரதீபாவின் அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்துள்ளார் விகாஸ்.
இதையடுத்த சமூக வலைத்தலங்களில் போலியான கணக்கை கொண்டு இந்த வீடியோக்களை அவர் வெளியிட்டு வந்துள்ளார். அந்த வீடியோக்கள் வைரல் ஆகியுள்ளது. இதனால் விகாஸ் மற்றம் பிரதீபா குடும்பத்தினரிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதானல் பிரதீபா மனம் உடைந்து போனார். இது பற்றி தனது நண்பர்களான சுஷில்(25) மற்றும் கௌதம் (27 ) ஆகியோருடன் பகிர்நது கொண்டுள்ளார்.
சுஷீல் என்ற நண்பர் கடந்த 10ம் தேதி விகாசை வீட்டுக்கு அழைத்துள்ளார். அவர் வந்தபோது சுஷீல் மற்றும் கௌதம் இணைந்து வீடு துடைக்கும் மாப் ஸ்டிக் மற்றும் வேறு சில ஆயுதங்களைப் பயன்படுத்தி கடுமையாகத் தாக்கி உள்ளனர் . இதில் படுகாயம் அடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோமாவில் இருந்த டாக்டர் விகாஸ் பின்னர் உயிரிழந்தார். .
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டதால் கொலை செய்ததாக பிரதீபா வாக்குமூலம் கொடுத்தார்.இந்நிலையில் விகாசின் மடிக்கணினி , செல்போனை ஆய்வு செய்தனர். அதில் பிரதீபா கூறியபடி அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது. அது மட்டும் இன்றி பிரதீபாவின் தாயின் அந்தரங்க வீடியோக்களையும் வெளியிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் பிரதீபா , சுஷில் , கௌதம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். சூர்யா என்பவரும் இந்த கொலைக்கு உடந்தை என கூறப்படுகின்றது. அவர் தப்பி ஓடிவிட்டதாககவும் அவரை இந்த வழக்கில் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.