நடிகை சமந்தா பத்து வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விஜய், சூர்யா போன்ற கோலிவுட் நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதேபோல தெலுங்கிலும் முன்னணி நடிகையாக பல ரசிகர்களை பெற்றுள்ளார். புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தாலும், ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை ஆட்டம் காண வைத்தது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/Untitled-136.jpg)
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது சகுந்தலம் மற்றும் யாசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். சமந்தா, இப்போது விஜய தேவரகொண்டாவுடன் “குஷி” படத்தில் நடித்து வருகிறார். சமந்தாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சரும பிரச்னை ஏற்பட்டது. “பாலிமார்பஸ் லைட் எரப்ஷன்” என்ற தோல் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிக வெளிச்சத்தில் நடித்ததால் அலர்ஜி ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். இதன் காரணமாக அஞ்சான் படப்பிடிப்பின் போதும் அவர் வெளிநாடு சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/image-8-1024x683.png)
சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரபரப்பாக இருந்தவர் சமந்தா. சமீப காலங்களாக சமந்தாவின் எந்த போட்டோஷுட்டும் வெளியாகவில்லை. தற்போது இதற்கான காரணம் வெளியாகியுள்ளது. சமந்தா கடுமையான உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சூரிய ஒளியால் ஏற்படும் தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமந்தா தற்போது ஓய்வில் இருப்பதாகவும், டாக்டர்களின் ஆலோசனையின்படி பொது வெளியில் வர மாட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை சமந்தா தரப்பு உறுதிப்படுத்தவில்லை.