உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவத்சவா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 41 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.
பிரபல நகைச்சுவை நடிகரான இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு உடற்பயிற்சி மையத்தில் (ஜிம் ) உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து அவரை பயிற்சியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் ஆஞ்சியோ பிளாஸ்டி என்ற சிகிச்சையை அவருக்கு மேற்கொண்டனர்.
மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாரடைப்புக்காண காரணங்கள் என்னென்ன ? எதனால் ஏற்படுகின்றது எப்போது உடற்பயிற்சி செய்வதை அல்லது வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அவசியம்.
பயிற்சியின்போது மாரடைப்பு : இளம் வயதினர் அவர்களின் ஆபத்துக்காண காரணிகளை புரிந்துகொள்ளுங்கள்..
இருதய நிபுணர் டாக்டர் கூறுகையில், மாரடைப்பு ஏற்படுவதில் பல காரணங்கள் கவலைகொள்ளச் செய்கின்றன. ’’ இளைஞர்கள் அவர்களின் ஆபத்துக்கான காரணிகளை அதி தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. முதலில் நீங்கள் உடலை சரியான அளவில் ஃபிட்டாக வைத்திருப்பதோ, ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டாலோ நீங்கள் ஆரோக்கியமாக இருக்கின்றீர்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்கின்றீர்கள் என அர்த்தம் கிடையாது என்பதை நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலானவர்கள் இந்த காலங்களில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வாழ்கின்றார்கள். உதாணரமாக , அதிகப்படியான மன அழுத்தம், சரியான தூக்கமின்மை, மது அருந்துதல், புகைப்பிடிப்பது, போதைப்பொருள் பழக்கம், தேவையில்லாமல் பாதுகாப்பற்ற மாத்திரைகள், உடல் எடைக்குறைக்க மாத்திரைகள் சாப்பிடுவது, நீரிழிவு நோய், அதிக ரத்த அழுத்தம், அதிகப்படியான உடற்பயிற்சி’’ இவை அனைத்தும் காரணங்களாக அமைகின்றன.
நீங்கள் உங்களுக்கான உடற்பயிற்சி அட்டவணையை தயாரிப்பதற்கு முன்பே உங்கள் ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் முதலில் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் ஆபத்துக் காரணிகளை நீங்கள் அறிந்து வைத்திருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகினற்து. எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை அதிகப்படியாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவ்வாறு அதிகப்படியாக உடற்பயிற்சி செய்தால் அதன் விளைவுகள் என்ன என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
பயிற்சியின்போது மாரடைப்பு வருவதற்கான ஆபத்து காரணிகளை சோதனை செய்யுங்கள்…
புகைப்பிடித்தல் , அதிக உயர் ரத்த அழுத்தம் , நீரிழிவு , ஆரோக்கியமற்றஉணவுமுறை, மாத்திரைகள் எடுத்துக் கொள்வது , மதுப்பழக்கம் …
மேற்கூறியவற்றை அதிகப்படியாக பயன்படுத்துவதை உடற்பயிற்சியில் ஈடுபடும்போது தவிர்க்க வேண்டும். ஒருவேளை மேற்கூறியவற்றை உடற்பயிற்சியின் போது தவிர்க்காவிடில் உடலுக்குள் ஊட்டச்சத்துக்களை விநியோகம் செய்வது தடுக்கப்படும். இதனால் சில உறுப்புகள் சரியாக செயல்படாமல் போகும். அதிகப்படியான உற்பயிற்சிக்கு பதிலாக யோகா, தியானம் போன்ற முழுமையான நலன் தருபவற்றை பின்பற்றலாம். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவேண்டும் எனும்பொழுது நாம் பாதிக்கப்படக்கூடிய காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.