fbpx

ரூ. 5,000 செலுத்தினால் போதும்… பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்..‌!

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 29.09.2022 அன்று 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18-லிருந்து 50 வரை இருக்க வேண்டும். சுய தொழில் செய்யும் அல்லது வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள் அல்லது முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் மூன்று புகைப்படத்துடன்(பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அணுகவும். நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை அல்லது கமிஷன் மட்டுமே வழங்கப்படும் என்று சென்னை மத்திய கோட்டம், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மேஜர் திவ்யா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

Vignesh

Next Post

ஒரே ஆண்டில் 2 மடங்காக அதிகரித்த கெளதம் அதானியின் சொத்து மதிப்பு.. ஒரு நாள் வருமானம் எவ்வளவு..?

Thu Sep 22 , 2022
ஒரு நாளைக்கு சுமார் 1612 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதன் மூலம் ஒரே ஆண்டில் தனது சொத்து மதிப்பை கெளதம் அதானி இரட்டிப்பு ஆக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி சமீபத்தில் உலகப்பணக்காரர் பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறினார்.. இது ப்ளூம்பெர்க் பட்டியலின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்திற்கு சொந்தமான பங்குகளின் விலை அதிகரித்ததால் அவரின் சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை […]

You May Like