நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சமீபத்தில் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. மற்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது பல திட்டங்கள் விலை குறைவாக உள்ளன. ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள், ஏர்டெல் 4ஜி டேட்டா ரீசார்ஜ், பிரபலமான திட்டங்கள், உண்மையிலேயே அன்லிமிடெட் பிளான்கள் போன்ற பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஏர்டெல் நிறுவனத்தின் பிரபலமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை குறித்து பார்க்கலாம்.. இந்த ப்ரீபெய்ட் ரூ. 399 என்ற விலையில் கிடைக்கிறது.. இந்த திட்டத்தின் கீழ் 28 நாட்கள் செல்லுபடியாகும். இத்திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி அதிவேக இணையம் கிடைக்கும். அதாவது, 28 நாட்களில் முழு 70ஜிபி டேட்டாவை பெறலாம்.. . அதிவேக இணைய வரம்பு முடிந்த பிறகு, இணைய வேகம் 64kbps ஆகிறது. இந்த திட்டத்தில், நீங்கள் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் பெறலாம்..
அடிப்படை நன்மைகள் தவிர, பல கூடுதல் நன்மைகளும் திட்டத்தில் கிடைக்கின்றன. அதாவது டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் 3 மாத மொபைல் சந்தாவும் கிடைக்கும்.. கூடுதலாக, இலவச ஹெலோட்யூன்களுக்கான சந்தாவையும் பெறலாம்.. இது, உங்களுக்கு பிடித்த எந்த பாடலையும் ஹலோ டியூனாக அமைக்க உதவுகிறது.
இது தவிர, நீங்கள் இசையைக் கேட்பதில் அதிக விருப்பமுள்ளவராக இருந்தால், இந்த திட்டம் உங்களுக்கு Wynk மியூசிக் இலவச சந்தாவை வழங்குகிறது, இதன் மூலம் நீங்கள் சமீபத்திய பாடல்களைக் கேட்டு மகிழலாம். இந்த அனைத்து நன்மைகளுடனும் மற்றொரு நன்மை என்னவென்றால், இதன் மூலம் FASTagல் ரூ.100 கேஷ்பேக் கிடைக்கும். இந்தத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடலாம்..