fbpx

போலி செய்திகளை பரப்பும் யூடியூபர் மீது கடும் நடவடிக்கை… மத்திய அரசு முடிவு..!!

சமூக வலைதளங்களில் தற்போது யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கலாம் என்ற நிலை உள்ளது. இதனால் பலர் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் அரசுக்கு எதிராக மற்றும் நாட்டை சீர்குலைக்கும் வகையில் சர்ச்சை உண்டாக்கும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதனால் பல பிரச்சினைகள் உண்டாகிறது. மேலும் பார்வையாளர்களை அதிகரிக்க போலியான செய்திகளையும் வெளியிட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பமும் உண்டாகிறது. இந்த நிலையை, கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் 100-க்கும் அதிகமான யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதில் பெரும்பாலான யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டது ஆகும். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இந்நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்களை முடக்கவும், யூடியூப்பர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.

Rupa

Next Post

முன்னாள் சட்டத்துறை அமைச்சருக்கு மரண தண்டனை..! ஊழல் வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

Thu Sep 22 , 2022
சீனாவின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயரதிகாரியான ஃபுஸெங்குவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சீனா டெய்லி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், “ஜிலின் மாகாணத்துக்கு உள்பட்ட ஜாங்சூன் பகுதியில் அமைந்துள்ள மக்கள் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. ஃபு பெய்ஜிங் மாநகராட்சியின் பொது பாதுகாப்பு அதிகாரி, பொதுப் பாதுகாப்பு துணை அமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்ட […]
முன்னாள் சட்டத்துறை அமைச்சருக்கு மரண தண்டனை..! ஊழல் வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

You May Like