fbpx

இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்த மூதாட்டி!!… 2 நாள் கழித்து உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் வசிப்பவர் சந்திரா சுப்பிரமணி (72). சந்திராவின் கணவர், கடந்த சில வருங்களுக்கு முன்பு வயது முதிர்வால் இறந்து விட்டார். இதனால் சந்திரா தனது மகன் வடிவேலுவுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மூதாட்டி சந்திரா சிங்கப்பெருமாள் கோவில் இருக்கும் பகுதிக்கு சென்று இருக்கிறார். போவதற்கு முன் தனது மகனிடம் சொல்லி சென்றுள்ளார்.

இதை தொடர்ந்து, நீண்ட நேரமாகியும் தாய் வீடு திரும்பாததால் சந்திராவின் மகன், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். ஆனால் அவர்களுக்கும் எதுவும் விவரம் தெரியவில்லை. இதனால் புகார் அளிக்கலாம் என்று மகன் வடிவேலு எண்ணிய நிலையில், தாம்பரம் இடையிலான இரயில் தண்டவாளத்தில் வயதான மூதாட்டி ஒருவரின் உடல் கிடப்பதாக வடிவேலுவுக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து அங்கு சென்று விசாரித்தார். பின்னர் அந்த மூதாட்டியின் உடலை பார்த்து, அது தனது தாய் என்று அடையாளம் கூறியுள்ளார்.

எனவே அந்த மூதாட்டியின் உடல் வடிவேலுவிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், வீட்டிற்கு எடுத்து சென்று உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு இறுதி சடங்கு முடிந்து உடல்நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒட்டப்பட்டது. இந்த நிலையில், அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர்கள் வழக்கப்படி இறந்துபோன சந்திராவுக்கு இன்று காலை படையல் வைக்கப்பட்டது. அந்த சமயத்தில் உயிரிழந்து , உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் மூதாட்டி சந்திரா திடீரென்று வீட்டிற்கு உயிருடன் வந்தார்.

இதை பார்த்த அவரது உறவினர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் அவர் வீட்டிற்கு வந்ததும் மகன் ஆனந்த அதிர்ச்சியில் அடைந்தார். இதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதோடு தான் பெற்றது தனது தாயின் உடல் இல்லை என்றும் மகன் கூறினார். இதை தொடர்ந்து மூதாட்டி சந்திராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறுதிசடங்கு செய்யப்பட்ட மூதாட்டியின் உடல் யாருடையது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Rupa

Next Post

’தமிழ்நாடு அரசு போதுமான இடத்தை கொடுக்கவில்லை’..! ஜே.பி.நட்டா பரபரப்பு குற்றச்சாட்டு..!

Thu Sep 22 , 2022
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற போதுமான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். காரைக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் கட்சி மற்றும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் இருந்து மதுரை வந்தார். பின்னர் மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், […]
’தமிழ்நாடு அரசு போதுமான இடத்தை கொடுக்கவில்லை’..! ஜே.பி.நட்டா பரபரப்பு குற்றச்சாட்டு..!

You May Like