fbpx

ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு..! வெளியில் வாங்கிக் கொள்ள நோயாளிகளுக்கு அறிவுரை..!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய மருந்துகளை நோயாளிகள் வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக செல்கின்றனர். இந்நிலையில், அனைத்து துறை தலைவர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நமது மருத்துவமனையில் தொடர்ந்து மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு..! வெளியில் வாங்கிக் கொள்ள நோயாளிகளுக்கு அறிவுரை..!

எனவே, நம்மிடம் கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டுமே நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும். இல்லாத அத்தியாவசிய மருந்துகளை நோயாளிகள் வெளியில் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளுமாறு தனி சீட்டில் எழுதிக் கொடுக்க வேண்டும்” என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிரபல ஜிப்மர் மருத்துவமனையிலேயே மருந்து தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Chella

Next Post

’மருந்து இல்லையென சீட்டு எழுதி கொடுக்கக் கூடாது’..!! துணைநிலை ஆளுநர் தமிழிசை அதிரடி..!!

Thu Sep 22 , 2022
’ஜிப்மர் மருத்துவமனையில் மருந்துகள் இல்லை என்று சீட்டு எழுதி கொடுக்கக் கூடாது’ என அறிவுறுத்தி உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் புகழ்பெற்ற மருத்துவமனையான ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடு என செய்திகள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு என புகார்கள் வந்ததை அடுத்து ஆலோசனை நடத்தினோம். […]

You May Like