fbpx

இன்று 2வது டி20..!! தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா? பதிலடி கொடுக்குமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறார். மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில், ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இன்று 2வது டி20..!! தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா? பதிலடி கொடுக்குமா இந்தியா?

இந்நிலையில், இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய வீரர்கள் களம் இறங்க உள்ளனர். அதே சமயம், இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றும் எண்ணத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் உள்ளதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

2வது டி20..!! தொடரை கைப்பற்றும் எண்ணத்தில் ஆஸ்திரேலியா..! பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா..!

இதற்கிடையே, ஹைதராபாத்தில் நடைபெற உள்ள மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்குவதில் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், காவல்துறையினர் தடியடி நடத்தி ரசிகர்கள் கூட்டத்தை கலைத்தனர். இதில், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Chella

Next Post

2-வது திருமணத்திற்கு ஓ.கே சொன்ன சமந்தா.. சத்குரு சொன்னதால் தான் இந்த திடீர் மாற்றமாம்..

Fri Sep 23 , 2022
சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி ஒரு கூட்டறிக்கை மூலம் தங்கள் பிரிவை அறிவித்தனர். அவர்கள் தங்கள் விவாகரத்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து, அதைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.. கடந்த சில வாரங்களாக, நாக சைதன்யா, சமந்தா அளித்து வரும் நேர்காணல்களில் தங்களின் பிரிவைப் பற்றி பேசி வருகின்றனர். அந்த வகையில், காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் கலந்து […]
’என்னதான் இருந்தாலும் அது என்னோட Wife’..!! சமந்தாவை சந்தித்து பேசிய கணவர் நாக சைதன்யா..!!

You May Like