இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி நாளை ஒரு உற்சாகமான செய்தி அறிவிக்கப்போவதாக சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி உற்சாகமான செய்தி ஒன்றை நாளை பகிர்ந்துகொள்ள உள்ளதாக கூறியுள்ளார். நாளை மதியம் 2 மணி அளவில் இந்த தகவலை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.இதனால் ரசிர்கள் எதற்காக இந்த சஸ்பென்ஸ் என பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்று 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது ஐ.பிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் நாளை 2 மணி அளவில் உற்சாகமான அறிவிப்பை வெளியிட உள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நான் பங்கேற்கும் அந்த லைவ் நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்பீர்கள் என நினைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஏதோ ஒரு நல்ல விஷயம் இருப்பதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஐ.பி.எல். தொடரில் மற்றுமே தோனியை பார்க்க முடிகின்றது என ரசிர்கள் ஏக்கத்தோடு உள்ளனர். இந்த தகவல்கள் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.