fbpx

ரூ.74,999 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.29,999.. Amazon இல் அதிகம் விற்பனையாகும் செல்போன்கள் !

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. நீண்ட நாட்களாக வாங்க விரும்பிய கேட்ஜெட்களை தற்போது மலிவு விலையில் வாங்கலாம். அதற்கான சரியான தருணம் இது.

பிளிப்கார்ட், அமேசான் ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்களும் ஒரே காலக்கட்டத்தில் பண்டிகை தின விற்பனையை அறிவித்து நடத்தி வருகிறது. இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு விருப்பமான சாதனங்களை அதீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றது.

பண்டிகை கால விற்பனை.. இந்த பண்டிகை கால விற்பனையில் அமேசானில் சிறந்த தள்ளுபடியுடன் அதிக வரவேற்புப் பெற்ற ஸ்மார்ட்போன்களை தான் பார்க்கப்போகிறோம். இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசானில் அதிகமாக விற்பனையாகி வருகிறது. ஸ்மார்ட்போன்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம் வாங்க.

OnePlus Nord CE 2 Lite 5G OnePlus Nord CE 2 Lite 5G ஸ்மார்ட்போனானது மிகவும் ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் பேனல் இடம்பெற்றுள்ளது. இதில் 60 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 695 சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெற்றுள்ளது.

அமோக வரவேற்புக்கு காரணம் இதுதான்.. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.18,999 என கிடைக்கிறது. வங்கி சலுகைகள் உட்பட கூடுதல் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.16,999 என வாங்கலாம். ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.16,999க்கு கிடைக்கிறது என்றால் வரவேற்பு இல்லாமல் இருக்குமா என்ன?

Samsung Galaxy S20 FE 5G அதீத தள்ளுபடியில் கிடைக்கும் மற்றொரு ஸ்மார்ட்போன் Samsung Galaxy S20 FE 5G ஆகும். இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூறலாம். இந்த ஸ்மார்ட்போனானது ரூ.74,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.29,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 61% சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் சலுகைகள் பயன்படுத்தும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.26,249 என வாங்கலாம்.


இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் மூலம் இயங்குகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12MP + 12MP + 8MP டிரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.


Apple iPhone 12 (128 ஜிபி) ஆப்பிள் ஐபோன் 12 ஆனது ரூ.70900 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.52,999 என கிடைக்கிறது. இந்த ஐபோன் மாடலுக்கு 26% தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் சலுகைகளுடன் இந்த ஐபோன் மாடலை ரூ.46,749 என வாங்கலாம். இதன் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஏ14 பயோனிக் சிப் மூலம் இந்த ஐபோன் மாடல் இயக்கப்படுகிறது.

Samsung Galaxy M13 Samsung Galaxy M13 ஸ்மார்ட்போன் மிட் ரேன்ஜ் ஆர்வலர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மிட் ரேன்ஜ் விலைப் பிரிவில் விற்கப்பட்ட ஸ்மார்ட்போனானது பட்ஜெட் விலையில் தற்போது கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.14,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.8199 என கிடைக்கிறது. 6.6 இன்ச் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே, 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.


Redmi A1 ரெட்மி ஏ1 ஸ்மார்ட்போனானது ரூ.8999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.6299 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 31 சதவீதம் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. HD+ டிஸ்ப்ளே உடன் MediaTek Helio A22 சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.


OnePlus Nord CE 2 5G OnePlus Nord CE 2 5G ஸ்மார்ட்போனானது 65W SUPERVOOC சார்ஜிங் உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே அமைப்பு இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது கூடுதல் சலுகையுடன் ரூ.22,749 என கிடைக்கிறது.

OnePlus 10R 5G OnePlus 10R 5G ஸ்மார்ட்போனானது ரூ.38,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.29,999 என கிடைக்கிறது. ஏறத்தாழ ரூ.10,000 தள்ளுபடியுடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 50MP டிரிபிள் கேமரா அமைப்பு, 80W SUPERVOOC சார்ஜிங் ஆதரவுடன் 6.7-இன்ச் 120Hz டிஸ்ப்ளே, MediaTek Dimensity 8100-Max சிப்செட் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளது.



Redmi Note 11T 5G Redmi Note 11T 5G ஸ்மார்ட்போனானது ரூ.20,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.12749 என கிடைக்கிறது. பக்கா மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக வாங்க சரியான வாய்ப்பு இது. இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் எச்டி+ 90 ஹெர்ட்ஸ் பேனல், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 50 எம்பி பிரதான பின்புற கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது.




Next Post

அடி தூள்..; மக்களே இனி உறுதி மொழி பத்திரம் கொடுத்தா நகை கடன் தள்ளுபடி...! அமைச்சர் அதிரடி அறிவிப்பு...!

Tue Sep 27 , 2022
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாக தமிழகத்தில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது தான்… அரசு எப்பொழுது நிறைவேற்றும் என்கின்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில், தற்பொழுது அதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது […]

You May Like