கவலை வேண்டாம்…!ஆதாருடன் வீட்டில் இருந்து நீங்களே இணைக்கலாம்…! எப்படி தெரியுமா…?

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி; மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், 2023 ஜனவரி 31 ம் தேதிக்கு பிறகு மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அவகாசம் வழங்கப்படாது. நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 30 வரை சுமார் 1.61 கோடி பேருக்கு மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஆன்லைன் மூலம் எப்படி இணைப்பது…?

முதலில் ஆதார் எண்ணை, மின்சார எண்ணுடன் ஆன்லைனில் இணைக்க விரும்புவர்கள் https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்.

அந்தப் பக்கத்தில் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யவேண்டும். இதையடுத்து, மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP வரும்.

அந்த OTPயை பதிவிட்ட உள்நுழைய வேண்டும். தொடர்ந்து, ஆதார் எண் எனக் குறிப்பிட்டுள்ள இடத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

பின்னர், ஆதார் கார்டு புகைப்படத்தை வடிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதைத்தொடர்ந்து, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதாக SMS கிடைக்கும். இறுதியாக ஆதார் எண்ணுடன் மின் எண் இணைந்துவிடும்….

Vignesh

Next Post

கடலோர மாவட்டங்களில் வரும் 3 மற்றும் 4-ம் தேதி மழை...! வானிலை மையம் தகவல்...! ‌‌

Sun Jan 1 , 2023
கடலோர மாவட்டங்களில் 3, 4 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழக கடலோர மாவட்டங்களில் 3, 4 ஆகிய தேதிகளில் ஓரிரு […]

You May Like