பூமியும் அதன் நிலப்பரப்புகளும் மில்லியன் கணக்கான வருடங்களில் உருவாகி இருக்கின்றன. சில நேரங்களில் டெக்டோனிக் தகடுகளின் இயக்கத்தால் உண்டாகும் பூகம்பங்களால் முழு மலைத்தொடர் உருவாகி இருக்கிறது. சில நேரங்களில், எரிமலை வெடிப்பு புதிய தீவுகளை உண்டாக்கும்.
விஞ்ஞானிகள் தற்போது ஏற்பட்ட ஒரு எரிமலை வெடிப்பால் உண்டான புவியியல் மாற்றத்தால் மத்திய டோங்கா தீவுகளில் ஒரு “குழந்தை” தீவைக் கண்டுபிடித்து இருக்கின்றனர். அது தற்போது ஆரம்ப நிலையில் உள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர். எரிமலை வெடித்த 11 மணி நேரத்திற்குள், புதிய தீவு நீர் மேற்பரப்புக்கு மேலே வடிவம் பெற ஆரம்பித்தது நாசாவால் செயற்கைக்கோள் படங்களில் மூலம் நாசா கண்டுபிடித்துள்ளது.
செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள், தீவின் மதிப்பிடப்பட்ட பரப்பளவு 10 மீட்டர் உயரத்துடன் 4,000 சதுர மீட்டராக வளர்ந்துள்ளதாக நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். ஒரு வாரம் கழித்து செப்டம்பர் 20 அன்று, தீவு 24,000 சதுர மீட்டர் பரப்பளவில் விரிந்துள்ளது. டோங்கா புவியியல் சேவைகளின் கூற்றுப்படி, புதிய தீவின் சரியான இடம் ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹாபாயின் வடகிழக்கே மற்றும் மொங்காஒனின் வடமேற்கில் அமைந்துள்ளது.
தற்போது நிகழ்ந்துள்ள எரிமலை வெடிப்பால் விமான சேவை, கடல்பயண சேவைகள் எதுவும் பாதிக்கபடவில்லை. இருப்பினும், மேலும் அறிவிப்பு வரும் வரை அனைத்து கடற்படையினரும், , ஹோம் ரீஃப்பில் இருந்து நான்கு கிலோமீட்டர்களுக்கு அப்பால் பயணம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நம் கண்ணெதிரே ஒரு தீவு உண்டாவதை பார்ப்பது மிகவும் அதிசயமாக உள்ளது. இருந்தாலும் , இத்தகைய எரிமலைத் தீவுகள் பெரும்பாலும் குறுகிய ஆயுளைக் கொண்டுள்ளன. இருந்தாலும், ஒரு சில விதிவிலக்குகளும் உள்ளது.
தற்போது உருவாகியுள்ள தீவின் தன்மை காலம் போக போகத் தான் தெரியும். தீவை கண்காணித்து வரும் ஆராய்ச்சியாளர்கள், எரிமலை இன்னும் வெடித்துக் கொண்டிருப்பதால் தீவு இன்னும் வளரக்கூடும் என்று கூறியுள்ளனர்.