Tata Tiago எலக்ட்ரிக் கார் இந்தியாவில் ரூ.8.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. இது இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார கார் ஆகும். முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு இந்த விலையில் Tata Tiago கார் கிடைக்கும். புதிய Tata Tiago EVக்கான முன்பதிவுகள் அக்டோபர் 10 முதல் தொடங்கும் என்றும், டெலிவரி ஜனவரி 2023 முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது…

இந்த கார் பல்வேறு பேட்டரி மற்றும் சார்ஜிங் விருப்பங்களுடன் கிடைக்கும். இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 315 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.. Tata Tiago EV, மற்ற டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் வாகனங்களைப் போலவே, வடிவமைப்பின் அடிப்படையில் ஒத்திருக்கும், ஆனால் சில குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாறுபாடுகளும் உள்ளன. ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் பிற இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பங்களுடன் 7-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பை இந்த கார் கொண்டுள்ளது.
டாடா டியாகோ EV இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களைப் பெறுகிறது. இது 315 கிமீ MIDC வரம்புடன் 24 kWh பேட்டரி பேக் உள்ளது.. 250 கிமீ வரம்பை வழங்கும் 19.2 kWh உடன் சிறிய பேட்டரி பேக் உள்ளது. வீட்டில் 15 ஏ சாக்கெட், 3.3 கிலோவாட் ஏசி சார்ஜர், 7.2 கிலோவாட் ஏசி ஹோம் சார்ஜர் மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் சார்ஜ் செய்யலாம்.