fbpx

’’ ஓசின்னு மட்டும் ஏசுறாங்க ’’ காசு இந்தா புடி நான் டிக்கெட் எடுக்காம வரமாட்டேன் ….

இலவச பேருந்து குறித்த அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பாட்டி ஒருவர் நான் ஓசில டிக்கெட் எடுக்காம வரமாட்டேன் என சண்டைபிடிக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது.

இலவசம் என்ற சொல்லுக்கும் ஓ.சி. என்ற சொல்லுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றது. என்னதான் இலவசமாக வழங்கினாலும் அதை தன்மானத்துடன் ஒப்பிட்டு ஓ.சி.ல மக்கள் பயணிக்கின்றார்கள் என்ற வார்த்தை மக்களை சற்று கடுப்பாக்கி உள்ளது.

திமுகவின் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் கே.பொன்முடி விழா ஒன்றில் பேசினார். அப்போது அரசு பல திட்டங்களை வழங்கியுள்ளது. அதை நீங்கள் வாங்கினீர்கள் அல்லவா .. பஸ்ல ஓசில பயணிக்கிறீங்க ஆமாவா? இல்லையா ? என பேசிய வீடியோ நேற்று வைரலானது. அமைச்சரின் இந்த பேச்சு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

நேற்று பெண் ஒருவர் பேசிய வீடியோவில் ’’ ஓ.சி.யில் எதையும் தர வேண்டாம். விலையை கட்டுக்குள் கொண்டு வந்தாலே போதும். இலவசமாக இது போன்ற திட்டங்களால் நாங்கள் அவமானப்படுகின்றோம். ஓ.சில தானே வர்ரீங்க என உங்களுக்கு சீட்டு எதற்கு என்பது போல பார்க்கின்றார்கள். ஓ.சில தானே என கண்டக்டர் முதல் அனைவரும் பேசுகின்றார்கள். எனவே நாங்கள் இதை வெறுக்கின்றோம் என கூறி வீடியோ வைரலானது.

இந்நிலையில் மூதாட்டி ஒருவர் எனக்கு வேண்டவே வேண்டாம். இந்தா காசு புடி நான் ஓ.சி.ல வரமாட்டேன் என கண்டக்டரிடம் தகராறு செய்கின்றார். அட ஏம்மா நீ வேற என் வேலையை நான் செய்யறேன் .. காசுலாம் வேண்டாம் என கண்டக்டர் பதிலளிக்கின்றார். நீ காசு வாங்கலன்னா எனக்கு டிக்கெட் வேண்டாம். நான் ஓசியில வரமாட்டேன். தமிழ்நாடே டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யட்டும் ஆனால் நான் டிக்கெட்  எடுத்துதான் போவேன். ’’ என கண்டக்டரிடம் அடம்பிடித்த வீடியோ வைரலாகி வருகின்றது.

https://twitter.com/arutweetz/status/1575378114678755328?s=20&t=bCcBpyOh_0nEBU5ReDaAFg

Next Post

நடிகை ஜெயலட்சுமி பாடலாசிரியர் சினேகன் மீது புகார் … அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

Thu Sep 29 , 2022
தனக்கு எதிராக பொய்யான புகார் அளித்துள்ள சினேகன்மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சினேகம் பவுண்டேஷன் விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியும், திரைப்பட பாடலாசிரியர் சினேகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் 11 லட்சம் ரூபாயை நடிகை ஜெயலட்சுமி மோசடி செய்துவிட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் மத்திய […]

You May Like