fbpx

அடேங்கப்பா…!! இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரொனால்டோ..!!

கால்பந்து உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் 19 கோடி ரூபாய் வசூலிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகின் முன்னணி மற்றும் அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் தளமான இன்ஸ்டாகிராமில், கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனல்டோவை 484 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரப்படுத்தப்படும் ஒரு பதிவுக்கு, அவர் இந்திய மதிப்பில் ரூ.19 கோடி வசூல் செய்வதாக ஒரு தனியார் நிறுவனத்தின் வலைதள பக்கம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவே ஒரு தனி நபரால், இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு விளம்பரத்திற்காக வசூலிக்கப்படும் அதிகபட்ச தொகையாக பார்க்கப்படுகிறது. அதே போல, அவருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில், 370 மில்லியன் பாலோவர்ஸ் கொண்ட அமெரிக்காவின் கெய்லி ஜென்னர் ஒரு பதிவிற்கு 14.96 கோடி ரூபாயும், அர்ஜென்டினாவின் கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி ஒரு பதிவுக்கு 14.49 கோடி ரூபாயும் வசூலித்து 3-வது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா...!! இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரொனால்டோ..!!

மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 215 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டிருப்பதை அடுத்து, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளம்பர பதிவை பதிவிட 8.9 கோடி ரூபாய் வசூலிப்பதாகவும், இந்த பட்டியலில் அவர் 14-வது இடத்தில் இருப்பதாகவும், அவரை இன்ஸ்டாகிராமில் 20 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கோவையில் இறைச்சி விற்பனைக்கு தடை; காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாநகராட்சி அறிவிப்பு..!!

Fri Sep 30 , 2022
கோவையில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இறைச்சி கடைகள் செயல்பட மாநகராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும், கோவை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் இரண்டாம் தேதி எந்த விதமான இறைச்சியையும் விற்பனை செய்ய கூடாது என மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. காந்தி ஜெயந்தி அன்று ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை […]

You May Like