மும்பை விமான நிலையத்திற்கு வந்த கரீனா கபூர் மீது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க கை வைக்க வந்ததால் கரீனா ஷாக்கானார்.
வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு பாலிவுட் பிரபல நடிகை கரீனா கபூர் வந்திருந்தார். அப்போது அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள கூட்டம் அலைமோதியது. அந்த கூட்டத்தில் ஒரு ரசிகர் அவர் தோளில் கை வைத்து செல்பி எடுக்க நினைத்திருந்ததாக தெரிகின்றது. இதற்காக நெருங்கி வந்து தோளில் கை போட முயற்சித்தார். உடன் வந்த ஊழியர்கள் அவரது கையை தடுத்து நிறுத்தி அவரை அனுப்பினர். இதனால் கரீனா ஷாக்கானார்.
இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாகபரவி வருகின்றது. மேலும் , அந்த தருணத்தில் கரீனாவின் முகம் அதிர்ச்சியிலும் சங்கடத்திலும் தவிப்பதை நம்மால் உணரமுடிகின்றது. இதனிடையே கரீனாவுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்கள் செய்வது சரியல்ல, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். ரசிகர்கள் தங்கள் வரம்பு மீறி செயல்படக்கூடாது. என ஒருவர் கமென்ட் செய்துள்ளார்.
மேலும் மும்பை விமான நிலையத்தில் இருந்து அவர் லண்டன் சென்றதாக கூறப்படுகின்றது. கதாநாயகர் இல்லாத ஒரு படத்தில் கதாநாயகியாக முக்கிய பாத்திரத்தில் அவர் நடிக்கின்றார். இது கொலை மற்றும் மர்ம கதை எனவும் கூறப்படுகின்றது. இந்தப்படத்தில் கவர்ச்சியில்லாத ஒரு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.