ஆவின் நிறுவனத்தில் பால் பாக்கெட்டுகளை திருடும் ஊழியர்கள்..!! சிசிடிவியில் சிக்கிய வீடியோ..!!

ஆவின் பால் பதப்படுத்தும் நிலையத்தில் பால் பாக்கெட்டுகளை ஊழியர்கள் திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் தொழிற்பேட்டையில் ஆவின் பால் பதப்படுத்தும் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் பால், பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தினமும் சுமார் 30 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில், பால் பதப்படுத்தப்படும் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் சிலர் பால் பாக்கெட்டுகளை திருடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆவின் நிறுவனத்தில் பால் பாக்கெட்டுகளை திருடும் ஊழியர்கள்..!! சிசிடிவியில் சிக்கிய வீடியோ..!!

அந்த வீடியோவில் பால் பாக்கெட்டை திருடும் நபர்களின் உருவம் நன்றாக பதிவாகியுள்ளது. இதையடுத்து, ஆவின் பொது மேலாளர் இளங்கோ, முதல் கட்டமாக அங்கு பணியாற்றி வரும் முகமது அஷ்ரப் என்பவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இதில் தொடர்புடைய இரண்டு ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஆவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Chella

Next Post

அரசு நிகழ்ச்சியை புறக்கணித்த மருத்துவத்துறை அமைச்சர்.. பாதியிலேயே வெளியேறியதால் சலசலப்பு..

Tue Sep 27 , 2022
மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு பாதியிலேயே வெளியேறியதால் சலசலப்பு ஏற்பட்டது.. சென்னை எழும்பூரில் பருவ கால காய்ச்சலை கட்டுப்படுத்த மருத்துவத்துரை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட 1000 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் 100 செவிலியர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வந்திருந்தார்.. […]
4,307 செவிலியர் காலிப்பணியிடங்கள்..!! ’எல்லாம் ரெடியா இருங்க’..!! ’அமைச்சர் சொன்ன குட் நியூஸ்’..!!

You May Like