fbpx

பிக்பாஸ் பிரபலம் கேப்ரில்லாவை காதலிக்கும் ஆஜித்..!! இருவீட்டாரும் சம்மதம்..? விரைவில்…

பிக்பாஸ் பிரபலம் ஆஜித் – கேப்ரில்லா இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பங்கேற்றவர்கள் கேப்ரில்லா மற்றும் ஆஜித். சூப்பர் சிங்கர் பிரபலமாக ஆஜித்தும், ஜோடி நம்பர் 1 மற்றும் வெள்ளித்திரை நடிகையாகவும் திகழ்ந்து வரும் கேப்ரில்லாவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இருவரும் சேர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெருக்கமாக இருந்தது காதல் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பிறகும், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருவரும் ரொமான்ஸ் டான்ஸ் ஆடினர். பிக்பாஸ் ஜோடிகளுக்கு பின் கேப்ரில்லா சின்னத்திரை சீரியலில் நடித்து வருகிறார். ஆஜித் ஒருசில படங்களில் பாடி வருகிறார். இருவரும் சேர்ந்து ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்தும் வந்தனர்.

பிக்பாஸ் பிரபலம் கேப்ரில்லாவை காதலிக்கும் ஆஜித்..!! இருவீட்டாரும் சம்மதம்..? விரைவில்...

இதனால், இருவரும் காதலித்து வருவதாகவும், இருவீட்டாரின் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து ஆஜித் கூறுகையில், ’பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் அதிக சண்டைகள் போடுவோம். ஆனால், தொலைக்காட்சியில் அந்த சண்டைகளை காட்டவில்லை. எங்கள் இருவருக்கும் எப்போது காதல் என்பது உண்டாகவில்லை. அப்படி சொல்லப்போனால் இருவரும் அண்ணன்-தங்கை போல தான் பழகி வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

இயக்குனராகும் விஜய் மகன்..!! முதல் படத்திற்கே இந்த ஹீரோதான் வேணுமாம்..!!

Thu Oct 6 , 2022
நடிகர் விஜயின் மகன் சஞ்சய், இயக்குனராக களமிறங்கினால், முதலில் விஜய் சேதுபதியை வைத்துதான் படம் இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. விஜய்க்கு அந்த அளவிற்கு ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில், விஜயின் மகன் சஞ்சய் லண்டனில் மேற்படிப்பு படித்து வருகிறார். படிப்பு முடித்த பிறகு […]
இயக்குனராகும் விஜய் மகன்..!! முதல் படத்திற்கே இந்த ஹீரோதான் வேணுமாம்..!!

You May Like