பிக்பாஸ் சீசன் 6-ல் முதலாவது ஆளாக வீட்டுக்குள் நுழைந்தவர் ஜி.பி. முத்து. இவருக்கு கமலஹாசன் முக்கிய சில அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டுக்குள் ஜி.பி. முத்துவை சக போட்டியாளர்கள் ஓட்ட ஆரம்பித்துவிட்டனர். நமக்கு இவரைப் பற்றி நன்றாகவே தெரியும் . இவர் யூ.டி.யூப் ஒன்றை நடத்தி வருகின்றார். படுமோசமான பேச்சாலேயே ரசிகர்களை கவர்ந்தார். மோசமான பேச்சானாலும் அதை காமெடியாகவே மக்கள் பார்க்கின்றனர். சிலருக்கு இது போன்று பேசுவது எரிச்சலைத்தரும்.
இந்நிலையில் ஜி.பி. முத்து வீட்டுக்குள் வரப்போகின்றார்என்பது தெரிந்ததுமே நம் மனதிற்குள் ஆயிரம் வசனங்கள் ஓடியிருக்கும். ஜி.பி.முத்து .. சக போட்டியாளர்களை இப்படித்தான் பேசுவார் என்று .. ஆனால் கமலஹாசன் ஜி.பி.முத்துவுக்கு இது குறித்த அறிவுறைகளை வழங்கி இருக்கின்றாராம். முதலில் , அவர் வழக்கமான வசனங்களையோ , வழக்கமாக திட்டுவதையோ பிக்பாஸ் வீட்டுக்குள் பயன்படுத்தக்கூடாது என்று கூறியிருக்கின்றாராம். குதிரைக்கு கடிவாளம் போட்டது போல இப்போது சில வார்த்தைகளை பயன்படுத்தமுடியாமல் ஜி.பி. முத்து தவிக்கின்றார் போல…. எனினும் அவர் சொன்னதை கடைபிடிப்பாரா என்பது போகப்போகத் தெரியும்.
முன்னதாக முதல்நாளில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது தான் , விளையாட்டாக டிக்டாக் போடுவதாகவும்.. நாளடைவில் அது தன்னை அடிமையாக்கியதாகவும் தெரிவித்திருந்தார்.