வாரிசு படத்தின் முந்தைய ரிலீஸ் வர்த்தகம் இத்தனை கோடியா?

வாரிசு படம் வெளியீட்டிற்கு முந்தைய வர்த்தகம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது அனைவரையும் வாளை பிளக்க வைத்துள்ளது.

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகின்றது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய வர்த்தகம் குறித்த செய்திகள் தீயாய் பரவி வருகின்றது.

1. டிஜிட்டல்- 60 கோடி (அமேசான் ப்ரைம்)

2. சாடிலைட்- 50 கோடி (சன் டிவி)

3. ஹந்தி டப்பிங் – 32 கோடி Goldmines

4. ஒவர்சீஸ்- 32 கோடி

5. ஆடியோ- 10 கோடி

இது மட்டுமின்றி பிற மொழி படங்களின் உரிமம் என கிட்டத்தட்ட ரூ.280 கோடியை தாண்டி விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புஷ்பா, கேஜிஎஃப் 2 போன்ற படங்களும், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படமும் பெரிய ஹிட் அடித்தன. கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படமும் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் கொடுத்தது. இவர்கள் இடையே வழக்கம் போல் அஜித் விஜய் படங்களும் வசூலை வாரி குவித்தன.

இந்நிலையில் அஜித் நடிக்கும் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் 2023 பொங்கல் அன்று வர உள்ளது. இரண்டுப்படங்களுக்கும் போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது. அஜித், விஜய் படங்கள் மோதல் என்பது 20 ஆண்டுகளாகவே தொடர்கிறது. இந்த ஆண்டு துணிவா? வாரிசா? என்பதை பொங்கலன்று தெரிந்துவிடும்.

Next Post

அடுத்த சர்ச்சையில் சிக்கினார் அமைச்சர் பொன்முடி…!!

Tue Nov 1 , 2022
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூட்டத்தில் மக்கள் கூச்சலிட்ட நேரத்தில் அமைச்சர் பொன்முடி கெட்ட வார்த்தையில் திட்டியதாக வீடியோ வைரலாகி வருகின்றது. ஏற்கனவே பல்வேறு சர்ச்சையில் சிக்கியிருக்கும் நிலையில் தற்போது புது சர்ச்சையாக இது உருவெடுத்துள்ளது. தமிழகத்தின் உயர்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டிய இவர் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகி வருகின்றது. கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி விழுப்புரத்தில் நியாயவிலைக் கடை […]
”போதை பொருள் அதிகரிக்க மத்திய அரசுதான் காரணம்”..! அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு..!

You May Like